நாண அலை உன்னில் வீசும்

கவிதை சொல்லுவேன் மெல்ல
நம் கதைகள் மெல்லுவேன்
நாண அலை உன்னில் வீசும்
சொல்ல என் இதழே கூசும்

கதையின் தொடக்கத்திலே
என் முகம் உன்னிடமில்லை
என் வசம் உன் முகம் இல்லை
பதின் வயதை நீ கடக்க
எனை தொடர்ந்து வந்தாய்
முதல் முத்தமாய் முதல் பார்வை
என் இதழ் நகைக்க சிலநொடிகள் தந்தாய்
தயக்கத்தோடு அறிமுகமானோம்
கைகுலுக்ககூட தயங்கி நின்றோம்

தயக்கம் மறைந்து, மயக்கம் கலந்த
நட்பு தொற்றிக் கொண்டது
எனக்கே எனக்காய் தோட்டம் அமைத்து
நீ மட்டும் பூத்து கொண்டாய்
கண்பட்ட பின்பும், பட்டு போகாத
கைபடாத ரோசா என்றாய்......

நினைவுகளும் சிரிப்புமாய் வளர்ந்தது
நம் நட்பு, பிரிய போகிறோம்
என்றதும், நம் சிரிப்பை நாமே
பறிக்க தயங்கினோம்
முன்பு பறித்தோம், மீண்டும் சிரிப்போம்
என்ற நம்பிக்கையில்......

சொல்ல துணியா சொற்களை
சொல்லிவிட துணிந்து
மடல்கள் பரிமாறிக் கொண்டோம்
ஆனாலும், அரைகால் புள்ளியில்
மீதமிருந்தன சொல்ல தயங்கிய சொற்கள்

ஏதோ ஒரு தவிர்க்கமுடியாத
தவிப்பில், தவிர்க்காமல்
சொன்னேன் என் தவிப்பை.....
நீயோ ஏற்காமல் மறுக்கவில்லை...
ஏற்கவும் ஏனோ துணிவில்லை உனக்கு

உன் உள்ளத்தோடு பிறர் பேச
நீ உன் உள்ளத்தோடு
சில காலம் பேசுவதை தவிர்த்தாய்
முழுவதுமாய் புறக்கணிக்க முடியாமல்
உன் ஆறுதலுக்கு ஆறுதலாய்
என்னிடம் பேசி கடந்தாய்

உன் கைகள் பறிக்கும் தொலைவில்
என் உள்ளம் இருந்தும்
யாரும் பறிக்காது, நீயும் பறிக்காமல்
அருகிலமர்ந்து கவனமாய் பார்த்துக் கொண்டாய்
மலர்ச்செடி என்றாவது தானாக
தலையில் மலரை சூடுமா?

தொலைவில் நின்று இவற்றை
வேடிக்கை பார்த்த பிரிவு கடைசியாக
வந்தேவிட்டது வாசற்படிக்கு
இப்படிக்கு என்று முடியும்
மடல் ஒன்று மீண்டும் நீண்டது
உன் கைவிரலினூடாக
நான் உனக்கு வேண்டாம்
என்று வேண்டி கேட்டுக் கொண்டாய்
மடல் தந்த பின் மீண்டும்
தோற்றுப்போனாய்


உன்னைப்போலவே உன் நீண்ட மடலும்
தோற்றுப்போனது நீ தந்த துண்டுச்சீட்டில்

" I Love U Da"என்று இரண்டு முறை
எழுதியிருந்தாய்

நாண அலை உன்னில் வீசும்

கவிதை சொல்லுவேன் மெல்ல
நம் கதைகள் மெல்லுவேன்
நாண அலை உன்னில் வீசும்
சொல்ல என் இதழே கூசும்

கதையின் தொடக்கத்திலே
என் முகம் உன்னிடமில்லை
என் வசம் உன் முகம் இல்லை
பதின் வயதை நீ கடக்க
எனை தொடர்ந்து வந்தாய்
முதல் முத்தமாய் முதல் பார்வை
என் இதழ் நகைக்க சிலநொடிகள் தந்தாய்
தயக்கத்தோடு அறிமுகமானோம்
கைகுலுக்ககூட தயங்கி நின்றோம்

தயக்கம் மறைந்து, மயக்கம் கலந்த
நட்பு தொற்றிக் கொண்டது
எனக்கே எனக்காய் தோட்டம் அமைத்து
நீ மட்டும் பூத்து கொண்டாய்
கண்பட்ட பின்பும், பட்டு போகாத
கைபடாத ரோசா என்றாய்......

நினைவுகளும் சிரிப்புமாய் வளர்ந்தது
நம் நட்பு, பிரிய போகிறோம்
என்றதும், நம் சிரிப்பை நாமே
பறிக்க தயங்கினோம்
முன்பு பறித்தோம், மீண்டும் சிரிப்போம்
என்ற நம்பிக்கையில்......

சொல்ல துணியா சொற்களை
சொல்லிவிட துணிந்து
மடல்கள் பரிமாறிக் கொண்டோம்
ஆனாலும், அரைகால் புள்ளியில்
மீதமிருந்தன சொல்ல தயங்கிய சொற்கள்

ஏதோ ஒரு தவிர்க்கமுடியாத
தவிப்பில், தவிர்க்காமல்
சொன்னேன் என் தவிப்பை.....
நீயோ ஏற்காமல் மறுக்கவில்லை...
ஏற்கவும் ஏனோ துணிவில்லை உனக்கு

உன் உள்ளத்தோடு பிறர் பேச
நீ உன் உள்ளத்தோடு
சில காலம் பேசுவதை தவிர்த்தாய்
முழுவதுமாய் புறக்கணிக்க முடியாமல்
உன் ஆறுதலுக்கு ஆறுதலாய்
என்னிடம் பேசி கடந்தாய்

உன் கைகள் பறிக்கும் தொலைவில்
என் உள்ளம் இருந்தும்
யாரும் பறிக்காது, நீயும் பறிக்காமல்
அருகிலமர்ந்து கவனமாய் பார்த்துக் கொண்டாய்
மலர்ச்செடி என்றாவது தானாக
தலையில் மலரை சூடுமா?

தொலைவில் நின்று இவற்றை
வேடிக்கை பார்த்த பிரிவு கடைசியாக
வந்தேவிட்டது வாசற்படிக்கு
இப்படிக்கு என்று முடியும்
மடல் ஒன்று மீண்டும் நீண்டது
உன் கைவிரலினூடாக
நான் உனக்கு வேண்டாம்
என்று வேண்டி கேட்டுக் கொண்டாய்
மடல் தந்த பின் மீண்டும்
தோற்றுப்போனாய்


உன்னைப்போலவே உன் நீண்ட மடலும்
தோற்றுப்போனது நீ தந்த துண்டுச்சீட்டில்

" I Love U Da"என்று இரண்டு முறை
எழுதியிருந்தாய்