கைப்படாத ரோஜா............!?

ஊர் கண்படும் ரோஜா..நீ

கைப்படாத ரோஜா என்று

பீற்றிக் கொள்கிறாய்....

ரோஜாக்களின் இதழ்களை

பறித்தெடுப்பது போல்,

உன் இதழ்களை

கைகளால் பிரித்தெடுப்பது

அவ்வளவு எளிதல்ல......

அதனால்தான் என்னவோ

நீ கைபடாத ரோஜா........

தனிமையில் நான்

தனிமையில் உன்னை அணைத்த தருணத்தின்

கதகதப்பு, இன்றைய தனிமையில் உன் நினைவாய்,

கதகதப்பாக்குகிறது...

குறள் 1163 - காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்

நோனா உடம்பின் அகத்து.

விளக்கம்: பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது

தேவதை பொம்மை, நீ!

குழந்தைகள் வியப்போடு,

தொட்டு பார்த்து விளையாட விரும்பும்,

தேவதை பொம்மை, நீ!



எனை அணைத்து உறங்கும் உன்னை........

களைத்து உறங்கும்,

குழந்தைகளை அருகில்

பார்க்கும் வேளைகளில்,

எனை அணைத்து உறங்கும்

உன்னை நினைத்து கொள்கிறேன்.

என்னை தேடும் உன் விழிகளை தேடி.........

சந்தையின் நெரிசலில்,

என்னை தேடும் உன் விழிகளை

தேடி, பார்த்தபின்பு, வாங்க வந்த

பொருட்களை மட்டுமில்லாமல்,

என்னையும் மறந்து எத்தனை முறை வீடு

திரும்பியிருக்கிறேன் தெரியுமா!

நீ என்னை நெருங்கும் முன்

உன் தோளில் கை வைக்கும் பொழுது

சில நேரங்களில் கைநீக்கி விடுகிறாய்,

உன்னை தொட வரும் தென்றலிடம்

என்னவனை தவிர யாருக்கும் தொட

உரிமையில்லை, நீ என்னை நெருங்கும்

முன் என்னவனின் கைகள் காற்று புகா

அளவுக்கு என்னை அணைத்து கொள்வான் பார்

என்று சொல்வது போல் இருந்தது.

உன்னையே குழந்தையாய் வேண்டி


வீட்டை குப்பை மேடாக

ஆக்கி விளையாடும் குழந்தைகளை,

பார்க்கும் பொழுதெல்லாம்,

உன் நினைவு வரும்,

குழந்தை வேண்டி,

உன்னையே குழந்தையாய் வேண்டி.

சொற்கள் தாள்களில் ஒட்டாமல்....


உனக்கான கவிதைகளை

எழுதிய தாள்களில்.....

கண்டு வெட்கப்பட அருகில் நீயில்லை

என்பதனால்....

சொற்கள் தாள்களில் ஒட்டாமல்....

கீழே வந்து விழுந்து விடுகின்றன

தும்மல்- உன் நினைவாகவா?


மூடநம்பிக்கைகளில் எனக்கு

நம்பிக்கையில்லை.....

ஆனாலும், நீ பிரிந்த தருணம் முதல்

ஒயாத தும்மல்.....எனக்கு


தோள் சாயும் உரிமை


ஏதோ ஒரு திரைப்பாடலில்

தோள் சாய உரிமைக்கோரும்

பெண்ணை குறிப்பிட்டு என் தோள்

நீ சாய்ந்த அந்த தருணம் இன்னும்

பசுமை பரப்புகிறது என் உள்ளத்தில்....

தோள்களில் தென்றல், தூசி என அனைத்தும்

அமர்ந்து செல்கிறது...........

உன் கைகளையும் காணவில்லை...

கன்னங்களையும் காணவில்லை தோழி

உனக்கு நான்கு இதழ்கள்....

என் காதலியிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு கையளிக்கப்பட்ட படத்தொகுப்பில் இடம்பெற்ற சில கிறுக்கல்கள்

எவ்வளவுதான் அழகை சேமித்து வைத்திருக்கிறாய்

எவ்வளவுதான் முத்தமிட்டு நான் அழகாக முயற்சித்தாலும்

உன் அழகுக்கு மட்டும் குறைவில்லையே

நீ உண்மையிலேயே அள்ள அள்ள குறையாத அழகு



போனால் போகட்டும் என்று உன்னை இப்பொழுது

அணுஅணுவாய் ரசிக்கிறேன். சிறிது நாட்கள் செல்லட்டும்

ரசனை அணுக்கூறு அளவிலும் இருக்கும்



எங்கு என் பயணத்தை துவக்கினாலும்

உன் காலடியிலேயே வந்து முடியும்


நீ என்னை கண்டு கூச்சப்படுகிறாய்

உன் உதடு சுழித்து நீ சிந்தும்

சிரிப்பை காணும் பொழுதுதான்

எனக்கும் கூச்சம் தொற்றி கொள்கிறது, என் செய்ய?


சில நேரங்களில் என்னையே பார்த்துக்

காத்துக் கொண்டிருக்கிறாய்...

குழப்பமாகிவிடுகிறது....

முத்தத்திற்கு இதழ்களா? கூச்சமா?என்று

உதடுகளை மறைக்காதே, இன்றைக்கு இப்பொழுது

அதிகமாய் வேண்டாம், ஒன்றிரண்டு முத்தம் மட்டும் போதும்....

மீதத்தை தவணை முறையில் நாளொன்று, பொழுதிரண்டு

என்று செலுத்தினால் போதும்...கட்டாயமாய் வசூலிக்க மாட்டேன்



உனக்கு நான்கு இதழ்கள்....

ஆம், காது மடல்களையும் சேர்த்துதான்.........

இதழ்களைவிட அவைதான் முத்தங்களை

எதிர்ப்பார்த்து காத்துகிடக்கின்றன


கைப்படாத ரோஜா............!?

ஊர் கண்படும் ரோஜா..நீ

கைப்படாத ரோஜா என்று

பீற்றிக் கொள்கிறாய்....

ரோஜாக்களின் இதழ்களை

பறித்தெடுப்பது போல்,

உன் இதழ்களை

கைகளால் பிரித்தெடுப்பது

அவ்வளவு எளிதல்ல......

அதனால்தான் என்னவோ

நீ கைபடாத ரோஜா........

தனிமையில் நான்

தனிமையில் உன்னை அணைத்த தருணத்தின்

கதகதப்பு, இன்றைய தனிமையில் உன் நினைவாய்,

கதகதப்பாக்குகிறது...

குறள் 1163 - காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்

நோனா உடம்பின் அகத்து.

விளக்கம்: பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறது

தேவதை பொம்மை, நீ!

குழந்தைகள் வியப்போடு,

தொட்டு பார்த்து விளையாட விரும்பும்,

தேவதை பொம்மை, நீ!



எனை அணைத்து உறங்கும் உன்னை........

களைத்து உறங்கும்,

குழந்தைகளை அருகில்

பார்க்கும் வேளைகளில்,

எனை அணைத்து உறங்கும்

உன்னை நினைத்து கொள்கிறேன்.

என்னை தேடும் உன் விழிகளை தேடி.........

சந்தையின் நெரிசலில்,

என்னை தேடும் உன் விழிகளை

தேடி, பார்த்தபின்பு, வாங்க வந்த

பொருட்களை மட்டுமில்லாமல்,

என்னையும் மறந்து எத்தனை முறை வீடு

திரும்பியிருக்கிறேன் தெரியுமா!

நீ என்னை நெருங்கும் முன்

உன் தோளில் கை வைக்கும் பொழுது

சில நேரங்களில் கைநீக்கி விடுகிறாய்,

உன்னை தொட வரும் தென்றலிடம்

என்னவனை தவிர யாருக்கும் தொட

உரிமையில்லை, நீ என்னை நெருங்கும்

முன் என்னவனின் கைகள் காற்று புகா

அளவுக்கு என்னை அணைத்து கொள்வான் பார்

என்று சொல்வது போல் இருந்தது.

உன்னையே குழந்தையாய் வேண்டி


வீட்டை குப்பை மேடாக

ஆக்கி விளையாடும் குழந்தைகளை,

பார்க்கும் பொழுதெல்லாம்,

உன் நினைவு வரும்,

குழந்தை வேண்டி,

உன்னையே குழந்தையாய் வேண்டி.

சொற்கள் தாள்களில் ஒட்டாமல்....


உனக்கான கவிதைகளை

எழுதிய தாள்களில்.....

கண்டு வெட்கப்பட அருகில் நீயில்லை

என்பதனால்....

சொற்கள் தாள்களில் ஒட்டாமல்....

கீழே வந்து விழுந்து விடுகின்றன

தும்மல்- உன் நினைவாகவா?


மூடநம்பிக்கைகளில் எனக்கு

நம்பிக்கையில்லை.....

ஆனாலும், நீ பிரிந்த தருணம் முதல்

ஒயாத தும்மல்.....எனக்கு


தோள் சாயும் உரிமை


ஏதோ ஒரு திரைப்பாடலில்

தோள் சாய உரிமைக்கோரும்

பெண்ணை குறிப்பிட்டு என் தோள்

நீ சாய்ந்த அந்த தருணம் இன்னும்

பசுமை பரப்புகிறது என் உள்ளத்தில்....

தோள்களில் தென்றல், தூசி என அனைத்தும்

அமர்ந்து செல்கிறது...........

உன் கைகளையும் காணவில்லை...

கன்னங்களையும் காணவில்லை தோழி

உனக்கு நான்கு இதழ்கள்....

என் காதலியிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு கையளிக்கப்பட்ட படத்தொகுப்பில் இடம்பெற்ற சில கிறுக்கல்கள்

எவ்வளவுதான் அழகை சேமித்து வைத்திருக்கிறாய்

எவ்வளவுதான் முத்தமிட்டு நான் அழகாக முயற்சித்தாலும்

உன் அழகுக்கு மட்டும் குறைவில்லையே

நீ உண்மையிலேயே அள்ள அள்ள குறையாத அழகு



போனால் போகட்டும் என்று உன்னை இப்பொழுது

அணுஅணுவாய் ரசிக்கிறேன். சிறிது நாட்கள் செல்லட்டும்

ரசனை அணுக்கூறு அளவிலும் இருக்கும்



எங்கு என் பயணத்தை துவக்கினாலும்

உன் காலடியிலேயே வந்து முடியும்


நீ என்னை கண்டு கூச்சப்படுகிறாய்

உன் உதடு சுழித்து நீ சிந்தும்

சிரிப்பை காணும் பொழுதுதான்

எனக்கும் கூச்சம் தொற்றி கொள்கிறது, என் செய்ய?


சில நேரங்களில் என்னையே பார்த்துக்

காத்துக் கொண்டிருக்கிறாய்...

குழப்பமாகிவிடுகிறது....

முத்தத்திற்கு இதழ்களா? கூச்சமா?என்று

உதடுகளை மறைக்காதே, இன்றைக்கு இப்பொழுது

அதிகமாய் வேண்டாம், ஒன்றிரண்டு முத்தம் மட்டும் போதும்....

மீதத்தை தவணை முறையில் நாளொன்று, பொழுதிரண்டு

என்று செலுத்தினால் போதும்...கட்டாயமாய் வசூலிக்க மாட்டேன்



உனக்கு நான்கு இதழ்கள்....

ஆம், காது மடல்களையும் சேர்த்துதான்.........

இதழ்களைவிட அவைதான் முத்தங்களை

எதிர்ப்பார்த்து காத்துகிடக்கின்றன