என்னிடம் இதுவரை சொன்னதில்லை

உன்னோடு பேச காத்துக்கிடக்கும்
இதழ்கள், என்னிடம் இதுவரை சொன்னதில்லை
உனக்கான ஏக்கத்தை

அன்பிற்குரிய தோழிக்கு,

அன்பிற்குரிய தோழிக்கு,
இம்மடல் நான் எழுத தொடங்கும் இரவு அதிகாலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது, கண்கள் களைப்பாக இருந்தாலும் உறக்கம் இன்னும் கண்களுக்கு தொலைவில் இருக்கிறது. இதை எழுதுவதற்கான காரணம் நான் இன்னும் சொல்ல தயங்கும் சொற்களை என் மடல் சொல்லிவிடாதா என்ற ஏக்கம்தான்.

எனக்கு பிடித்ததெல்லாம் உன் கவிதைகள்தான் என்கிறாய். நானும் கூட உன்னிடமிருந்து பறித்ததும் கவிதைகள்தான் மட்டும்தான். பிரியும்முன் அழகான கவிதை வேண்டுமென்றாய். எனக்கு யார் கவிதைகள் எழுதித் தருவார்கள் என்று ஏங்கி எழுதியிருந்தாய், நானும்தான் என்னிடம் கேட்டுக்கொள்கிறேன். உன்னை போலொரு கவிதையை எவ்வளவு விரைவில் என் கவிதை அறையில் அருகில் அமரவைப்பேன் என்று.

காதல் என்ற சொல்லை கண்டு இவ்வளவு அச்சப்படுகிறாய், தயங்குகிறாய். காதல் என்ற சொல்லை மனிதன் கண்டுபிடிப்பதற்கு முன்பே காதல் மனிதனை கண்டுபிடித்துவிட்டது. பிரிவு,ஏக்கம் போன்ற உணர்வுகளுக்கு காதல் என்ற சொல்லை பயன்படுத்த தயக்கிமிருந்தால் விட்டுவிடு, சொல்லில் என்ன இருக்கிறது? புது சொல்லை கண்டுபிடித்துக் கொள்ளலாம். சுறுக்கமாக சொன்னால் உன்னை பிரிந்து செல்வதை எண்ணித்தான் உள்ளம் மிகவும் ஏங்குதடி. ஒன்றிரண்டு மாதத்தில் உன்னை மறந்துவிடுவேன் என்கிறாய். ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்தே இதற்கான பதிலை உனக்கு நான் தருவேன். எனக்காக நீ காத்திருப்பதை காண வருவேன்.

நானே உன் முதல் தோழன், உன்னுள் தேங்கி கிடந்த வெட்கங்களை முகத்திலும், சிரிப்பை உதட்டிலும், தேடலை உள்ளத்திலும் தொடங்கி வைத்த முதல் தோழன். நீ என் கவிதைகளுக்கு ரசிகை, நான் உனக்கு ரசிகன்.

என்னை மறவாதே என்ற ஒற்றை சொல்லை ஓராயிரம் முறை சொல்ல விருப்பம், மறந்தும் என்னை மறந்து விடாதே...

உனக்கே தெரியாமல், தெரிந்தே உன் உள்ளம் விரும்பும் தோழன் மகிழ்நன்

நட்பு

உறக்கம் கலைந்து
உள்ளம் நுழைந்து
தொல்லை செய்கிறானா? உன் தோழன்

தயக்கமின்றி ஏற்றுக் கொள்
அவன் நட்பை நெருக்கமாய்..
காதல் என்ற சொல் தொலைவாய் தோன்றினால்