கவிதைகள் பிடிக்கும் வித்தைகள்

காற்றில் கூட கவிதைகள்

பிடிக்கும் வித்தைகள்,

கற்றுக் கொண்டேன், உன்னோடு

சேர்ந்து நான் சுவாசிக்க தொடங்கியவுடன்..

நாவினால் இதழ் சுட்டபுண்......

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு வள்ளுவன் சொன்னான்

நாவினால் இதழ் சுட்டபுண் உள்ளத்தை ஆற்றும்,

ஆறாதே பிரிவினால் சுட்ட தருணம்....

நடிக்கவாவது கற்று தருகிறது காதல், பல நேரங்களில்..


பெண்களை படுக்கை அறையிலும்,

அடுப்பங்கறையிலும் மட்டும்

ஒடுக்கி வைக்க நினைக்கும்

இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு

ஓரளவு தாங்களும் பெண்களை

மதிப்பவர்கள் என்று நடிக்கவாவது

கற்று தருகிறது காதல், பல நேரங்களில்..

நீ கவனிக்காதிருக்கும் பொழுதில் நான் கவனிக்க வேண்டும்

நீ தனிமையில் உணரும்

தேவதை தருணத்தை,,

என்றாவது நீ கவனிக்காதிருக்கும்

பொழுதில் நான் கவனிக்க வேண்டும்

என்பது என் நீண்ட நாள் விருப்பம்.

ஆனால், நீ தனிமையில் இருக்கும்

பொழுதுகளை என்னை தூண்டி காதல்

பறித்து விடுகிறது.

மலருக்கு பதிலாக இதழ்கள் வேண்டுமானால் தருகிறேன்



நான் மலர் போல் மெல்லியவன் இல்லை

என்பதற்காக, மெல்லிய மலரை

கொடூரமாக அதன் காம்புகளிலிருந்து

பறித்து, பிரித்து உன்னிடம் தருவதில் எனக்கு

உடன்பாடில்லை...

மலருக்கு பதிலாக இதழ்கள் வேண்டுமானால் தருகிறேன்..

நம் நிழல்கள் சந்திக்க நேர்ந்தால்



இரவு நிலா வெளிச்சத்தில்,

இருவரும் நடந்து போகும்

வழியில், நம் நிழல்கள் சந்திக்க நேர்ந்தால்,

நம்மை மறந்து விட்டு, அப்படி

என்னதான் பேசிக் கொள்ளுமோ?

தேவதை நீ, கடவுளை வணங்கலாமா?


பாமரப் பெண்கள் கடவுள் என்ற

கற்பனையிடம் வேண்டுவது இயல்பு,

என் கனவுகளுக்கு உயிர் வந்த பின்பு

தோன்றிய உண்மை தேவதை நீ,

நீ கடவுளை வணங்கலாமா?

பூக்களின் நப்பாசைதான் காரணமாக இருக்கும்


நீ ஆடப்போகும் ஊஞ்சல்

என்று தெரிந்தவுடனே

பூங்கொடிகள் எப்படி,

ஊஞ்சலின் கைக்கயிற்றை

சுற்றியிருக்கின்றன பாரேன்...

அப்படியாவது வண்ணத்துப்பூச்சிகள்

தங்களையும் சுற்றாதா, என்ற பூக்களின்

நப்பாசைதான் காரணமாக இருக்கும்.

அப்படித்தானே..............

உருகிக்கிடக்கின்றது என் கண்கள்...

தன் நிழலை பார்த்து

வியப்படைந்து கிடக்கும்

குழந்தையைப்போல உன்னை

பார்த்து உருகிக்கிடக்கின்றது

என் கண்கள்...

பூக்களின் உள்ளம் என்ன பாடுபடும்???????


பூக்களின் இதழ்களும் உன் இதழ்

வருடும் முத்தத்திற்காகத்தானே

மலர்ந்து காத்திருக்கின்றன, பின் நீ

பூக்களை அருகில் வைத்துக் கொண்டே

என்னை முத்தமிடுகிறாயே,

பூக்களின் உள்ளம்

என்ன பாடுபடும்???????


உன் குரல் கேட்கும் ஆர்வத்தில்.....


நீ என் உள்ளத்தில் குடிபுகுந்து

உரக்க குரல் கொடுக்க

தொடங்கியவுடன், உன் குரல் கேட்கும்

ஆர்வத்தில் என் இதயம் துடிக்க

மறந்து விட்டது...

ஆனால், உன் குரலதிர்வால்

இரத்தம் சீராகத்தான் இன்னும்

ஓடிக் கொண்டிருக்கிறது உடலில்...

கண்களுக்கு சுழுக்கு...

நீ முகம் சுழித்து காட்டும்

அத்தனை உணர்வுகளையும்

அவசர, அவசரமாக பார்த்ததில்

கண்களுக்கு சுழுக்கு ஏற்பட்டு விட்டது..

வெட்கத்தை கேட்டால்... வெட்கத்தை தருகிறாயே

--> --> -->
எதை கேட்டாலும் வெட்கத்தையே,
தருகிறாயே வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்? என்று காதலிகளிடம்
கேள்வி கேட்டார் தபூ சங்கர்..
எந்த காதலியும் இதற்கு பதில்
சொன்னதாய் தெரியவில்லை...
ஆனால், நீ மட்டும்,
வெட்கத்தை கேட்டால்...
வெட்கத்தை தருகிறாயே

பூஞ்செடிகளின் காவல்காரன் நான்.....


நீ தனியே நடந்து செல்லும்

பாதையில் பூக்கும் பூஞ்செடிகளின்

காவல்காரன் நான்.....

நீ வரும் வரை மொட்டாகவும்,

நீ வந்தவுடன் மலராகவும்,

நீ விருப்பப்பட்டால் உதிர்ந்து

உன் மயிர் ஏறிடவும்

மட்டுமே என் தோட்டச்செடிகளில்

மலர்கள் முளைக்கின்றன

கவிதைகள் பிடிக்கும் வித்தைகள்

காற்றில் கூட கவிதைகள்

பிடிக்கும் வித்தைகள்,

கற்றுக் கொண்டேன், உன்னோடு

சேர்ந்து நான் சுவாசிக்க தொடங்கியவுடன்..

நாவினால் இதழ் சுட்டபுண்......

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு வள்ளுவன் சொன்னான்

நாவினால் இதழ் சுட்டபுண் உள்ளத்தை ஆற்றும்,

ஆறாதே பிரிவினால் சுட்ட தருணம்....

நடிக்கவாவது கற்று தருகிறது காதல், பல நேரங்களில்..


பெண்களை படுக்கை அறையிலும்,

அடுப்பங்கறையிலும் மட்டும்

ஒடுக்கி வைக்க நினைக்கும்

இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு

ஓரளவு தாங்களும் பெண்களை

மதிப்பவர்கள் என்று நடிக்கவாவது

கற்று தருகிறது காதல், பல நேரங்களில்..

நீ கவனிக்காதிருக்கும் பொழுதில் நான் கவனிக்க வேண்டும்

நீ தனிமையில் உணரும்

தேவதை தருணத்தை,,

என்றாவது நீ கவனிக்காதிருக்கும்

பொழுதில் நான் கவனிக்க வேண்டும்

என்பது என் நீண்ட நாள் விருப்பம்.

ஆனால், நீ தனிமையில் இருக்கும்

பொழுதுகளை என்னை தூண்டி காதல்

பறித்து விடுகிறது.

மலருக்கு பதிலாக இதழ்கள் வேண்டுமானால் தருகிறேன்



நான் மலர் போல் மெல்லியவன் இல்லை

என்பதற்காக, மெல்லிய மலரை

கொடூரமாக அதன் காம்புகளிலிருந்து

பறித்து, பிரித்து உன்னிடம் தருவதில் எனக்கு

உடன்பாடில்லை...

மலருக்கு பதிலாக இதழ்கள் வேண்டுமானால் தருகிறேன்..

நம் நிழல்கள் சந்திக்க நேர்ந்தால்



இரவு நிலா வெளிச்சத்தில்,

இருவரும் நடந்து போகும்

வழியில், நம் நிழல்கள் சந்திக்க நேர்ந்தால்,

நம்மை மறந்து விட்டு, அப்படி

என்னதான் பேசிக் கொள்ளுமோ?

தேவதை நீ, கடவுளை வணங்கலாமா?


பாமரப் பெண்கள் கடவுள் என்ற

கற்பனையிடம் வேண்டுவது இயல்பு,

என் கனவுகளுக்கு உயிர் வந்த பின்பு

தோன்றிய உண்மை தேவதை நீ,

நீ கடவுளை வணங்கலாமா?

பூக்களின் நப்பாசைதான் காரணமாக இருக்கும்


நீ ஆடப்போகும் ஊஞ்சல்

என்று தெரிந்தவுடனே

பூங்கொடிகள் எப்படி,

ஊஞ்சலின் கைக்கயிற்றை

சுற்றியிருக்கின்றன பாரேன்...

அப்படியாவது வண்ணத்துப்பூச்சிகள்

தங்களையும் சுற்றாதா, என்ற பூக்களின்

நப்பாசைதான் காரணமாக இருக்கும்.

அப்படித்தானே..............

உருகிக்கிடக்கின்றது என் கண்கள்...

தன் நிழலை பார்த்து

வியப்படைந்து கிடக்கும்

குழந்தையைப்போல உன்னை

பார்த்து உருகிக்கிடக்கின்றது

என் கண்கள்...

பூக்களின் உள்ளம் என்ன பாடுபடும்???????


பூக்களின் இதழ்களும் உன் இதழ்

வருடும் முத்தத்திற்காகத்தானே

மலர்ந்து காத்திருக்கின்றன, பின் நீ

பூக்களை அருகில் வைத்துக் கொண்டே

என்னை முத்தமிடுகிறாயே,

பூக்களின் உள்ளம்

என்ன பாடுபடும்???????


உன் குரல் கேட்கும் ஆர்வத்தில்.....


நீ என் உள்ளத்தில் குடிபுகுந்து

உரக்க குரல் கொடுக்க

தொடங்கியவுடன், உன் குரல் கேட்கும்

ஆர்வத்தில் என் இதயம் துடிக்க

மறந்து விட்டது...

ஆனால், உன் குரலதிர்வால்

இரத்தம் சீராகத்தான் இன்னும்

ஓடிக் கொண்டிருக்கிறது உடலில்...

கண்களுக்கு சுழுக்கு...

நீ முகம் சுழித்து காட்டும்

அத்தனை உணர்வுகளையும்

அவசர, அவசரமாக பார்த்ததில்

கண்களுக்கு சுழுக்கு ஏற்பட்டு விட்டது..

வெட்கத்தை கேட்டால்... வெட்கத்தை தருகிறாயே

--> --> -->
எதை கேட்டாலும் வெட்கத்தையே,
தருகிறாயே வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்? என்று காதலிகளிடம்
கேள்வி கேட்டார் தபூ சங்கர்..
எந்த காதலியும் இதற்கு பதில்
சொன்னதாய் தெரியவில்லை...
ஆனால், நீ மட்டும்,
வெட்கத்தை கேட்டால்...
வெட்கத்தை தருகிறாயே

பூஞ்செடிகளின் காவல்காரன் நான்.....


நீ தனியே நடந்து செல்லும்

பாதையில் பூக்கும் பூஞ்செடிகளின்

காவல்காரன் நான்.....

நீ வரும் வரை மொட்டாகவும்,

நீ வந்தவுடன் மலராகவும்,

நீ விருப்பப்பட்டால் உதிர்ந்து

உன் மயிர் ஏறிடவும்

மட்டுமே என் தோட்டச்செடிகளில்

மலர்கள் முளைக்கின்றன