சே தன் மனைவிக்கு எழுதிய கடிதம்

அன்பிற்குரியவளே!

உன்னை பிரிந்து போவது வருத்தமாகத்தான் இருக்கிறது.என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் உயரிய செயலுக்காக தியாகங்கள் செய்ய விரும்பிகிற இந்த மனிதனை நீ அறிவாய்.

  உள்ள-திடத்தை இழந்து விடாதே. ஒரு வேளை, நான் இறந்து போனால்,என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டு செல்லும் பணியை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களை கண்டு நம்மை போலவே அவர்களும் சினம் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

  காலமும் தூரமும் நம்மை பிரித்தாலும்,எப்போதும் நான்  உங்களுடன்தான் இருப்பேன்,என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டு பிரிகிறோம் என்றுஎண்ணும்போது வேதனை அதிகரிக்கிறது. ஆனால், மக்களை சுரண்டும் எதிரிகளுடன்தான் போரிட சென்று கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும்போது என் வேதனை குறைகிறது.

உன் உடல் நல்த்தையும் கவனமாக பார்த்துக் கொள். குழந்தைகளைக் கவனித்துக் கொள்.என் தாய் நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாக பெற்றதையும் எண்ணி பெருமைப்படுகிறேன்.

 இந்த போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதி தருணத்தில் உன்னை பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

மருதன் எழுதிய

சேகுவேரா-வேண்டும் விடுதலை நூலிலிருந்து

பக்கம்:174

ஏன்?எதற்கு?எப்படி?

உன்னை ஏன் காதலிக்க கூடாது
என்று உள்ளம் கேட்டது,
இன்று வரை ஏன்
உன்னை காதலிக்க வேண்டும்? என்று
என் உள்ளத்திடம் கேட்டதே இல்லை
ஏனென்றால் நீ என் உள்ளம் காட்டிய
பெண்ணாக இருந்தாலும், இனி என்
உள்ளம் மறுத்தாலும் கேட்பதாயில்லைநான்,
எல்லாம் ஒரு சுயநலம்தான்
ஏனென்றால்,எல்லோருக்கும் பெண்ணை காதலிக்கும்
வாய்ப்பு கிடைக்கும், எனக்கு மட்டும் தேவதையை
காதலிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

எதற்குதான் உன்னை காதலித்து
தொலைத்தேனோ?என்னை தொலைக்கத்தான்
உன்னை காதலிக்க துணிந்தேனோ!!!!!

இவ்வளவு ஏன்?
எப்படி  காதலிக்க வேண்டும் என்று
கூட ஆலோசனை கேட்டதில்லை?
உள்ளத்திடம், உன்னை உள்ளம்
காட்டியதுதான் தாமதம்,
காதலோடு இலவச  இணைப்பாக
கவிதைகளையும் அல்லவா எடுத்து
வந்திருக்கிறாய்,எப்படி எப்படிஎன்று கேட்க முடியும்
                                                                                         
என் எழுத்துகள் எதுவுமே கவிதைகள் ஆகிப்போகின்றது,
உன் கண்கள் பார்த்து, கன்னம் சிவக்க நீ சிரிக்கும்
மௌனச்சிரிப்பில்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கிண்டல் செய்கிறது காதலும்,எழுதுகோலும்

உனக்காக கவிதை

தேடித்திரியும் என் உள்ளம்

உன்னை மட்டுமே கண்டுபிடிக்கிறது,

உனக்குத்தான் கவிதை என்று தெரியாமலேயே

உன்னை பற்றி மட்டுமே எழுதி முடிக்கிறது

பேனா மை!

அப்படி என்ன எழுதிவிடுவாய்?

அவளுக்கு தெரியாமல், அவளைப் பற்றி

என்று எழுதுகோலிடம் கேட்டால்,

அப்படி என்ன  காதலை

அவளிடம் சொல்லிவிடுவாய்?

அவளுக்கு அறியாத காதலை

நான் நாளும் காதலை தெரிவிக்கிறேனாம்

கிண்டல் செய்கிறது காதலும்,எழுதுகோலும்

காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

நான் உன்னில் என்னை தேடும் தருணம்

என்னிடம் உன்னை ஒப்படைத்து விட்டு

இதழ்தாங்கும் மலர்ச்செடி போல காத்திருக்கிறாய்

இதழ்களும் சலிக்காமல் எப்படித்தான் ஒத்துபோகிறதோ?

சலிப்புகள் சிலநேரங்களில் உனக்கு எட்டிப்பார்த்தாலும்

கூச்சம் என்று கூச்சமே இல்லாமல் பொய் வேறு சொல்லிவிடுகிறாய்

நான் சினம் கொள்ளக்கூடாதென்று.

உன் அன்பை வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

சிறு குழந்தையை கொஞ்சினாலும்,

எனக்கு மட்டும்தான் அது என்று உரிமை

கொண்டாடுகிறாய் சரி, ஆனால், சிலநேரம்

யாரையும் திட்டினாலும்,என்னை திட்டுவதனாலும்

என்னை மட்டும் திட்டுஎன்கிறாயே உன் அன்பை

வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

முன்பெல்லாம் எனக்கு அப்படி தோன்றியதில்லை

ஆனால், நீ இப்பொழுது யாரிடம் பேசினாலும்

எனக்கு சினம் வருகிறது என்கிறாய்,

நான் யாரிடம் பேசினாலும் உன்னை பற்றிதான்

வெகுவாக பேசுகிறேன் என்பதை புரியாமல்;

அடம்பிடிக்கும் உன் ஆழமான அன்பை

வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

என் உடல் சூடெல்லாம், உன் உடல் தழுவியதால்

நழுவின என்று நான் நழுவிச்செல்லும் தருணம்

உன் உடல் காய்ச்சலில் கொதிப்பதாகக்கூறி

உன் அருகில் மீண்டும் என்னுடல் பற்றிக்கொண்டது,

தணிப்பவளும், வெட்பம் கூட்டுபவளும் நீயாயிருக்க

வெறும் காதல் என்று மட்டும் எப்படிச் சொல்ல?

புரட்சிக்கருத்துகள் என்னை மூளைச்சுற்றி

வந்தாலும், பூக்களாய் என் சிந்தையெங்கும்

குடியிருக்கும் நீ,எனக்காக நான் ஏற்றுக்கொண்ட

கருத்துக்களை பிடிக்காவிட்டாலும் வலிந்து படிக்கும்