உன்னை நிழலை முத்தமிடுவதாக நினைத்து!


உன்னை முத்தமிட்டபின்பு

என் இதழ்கள் உணவை தொட

மறுக்கின்றன,

அதோடு நில்லாமல் , என் நிழலோ!

உன் நிழல் பட்ட இடம் கண்டால்

அவ்விடம் விட்டு நகரவே மறுக்கிறது,

என்னோடு வரவும் மறுக்கிறது,

உன்னை நிழலை முத்தமிடுவதாக நினைத்து

அங்கேயே தங்கிவிடுகிறது போலும்! 

மொத்தமாக கிள்ளி போகிறாய்!


கிள்ள வேண்டும் போலவே

தோன்றுகிறது என்றாய்,

எனக்கும்தான் உன்னை அள்ள

தோன்றுகிறது!

என்று எனக்கு நானே 

உள்ளத்தில் கூறிக்கொண்டேன்.

ஆனால், நீ அள்ளி முடியும்
கூந்தலிலேயே என் உள்ளம் மட்டுமல்லாமல்,

என்னையும் மொத்தமாக கிள்ளி போகிறாய். 

காதலாய் வடிந்து ஒடும்!!!!!


என் நண்பன் ஒரு குவளை இதை பற்றி ஒரு கவிதை வடி பார்ப்போம் என்றான்

அவனிடம் நான் அளித்த்து இதோ

 

ஒரு குவளை கொடுத்து

கவிதை வடிக்க சொன்னாய்,

குவளை ஒன்றும் என்னவளின்

நினைவுதுளிகள் தங்கி நிற்கும்

உள்ளக்கிளைகளும் அல்ல,

அதன் இலைகளும் அல்ல,

ஒரே ஒரு முறை குவளையின்

ஏதாவது ஒருபுறத்தில் என்னவளின்

பெயரை எழுதிப் பார்,

கவிதை நான் வடிக்க தேவையில்லை,

கவிதை காதலாய் வடிந்து ஒடும்

நீ காட்டிய குவளையின் விளிம்பில்......

நிழல் கண்ணாடியின் கண்டனம்


உன் வீட்டு நிலை கண்ணாடி

எனக்களித்த கண்டன ஓலை,

 

உன்னவளிடம் சொல்லி வை,

தினமும், நிழல் படும்படியாய் நின்று விட்டு

உண்மையை மட்டும் தன்னோடு கொண்டு

சென்று விடுகிறார்ள்!

இது, இனிப்பு காண்பித்து, குழந்தையை

ஏமாற்றுவது போல் உள்ளது,

நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

நான் கூறினேன்,

நீ ஒன்றும் அவளை கடிந்து கொள்ளாதே,

அவள் தன் நிழல் உன்னிடம் விடுத்து,

உண்மை தனதாய் கொண்டு வருவதே,

அந்த உண்மை எனதாய் இருப்பதால்தான்

நான் அவள் நிழலாய் பின் தொடர்வதால்தான்.

என்று கூறி ஏதோ அமைதி படுத்தினேன்

உன் வீட்டு நிலைக் கண்ணாடியை.

கொள்ளை அழகுதான் , எனக்கு!

என் எழுத்து அழகாக இருக்காது,

நீ பார்த்தால் கிண்டலடிப்பாய் என்று

அழகாக சலித்து கொண்டாய்,

(சலித்து கொள்வதிலும் உன் அழகு

எப்படிதான் தெறித்து விழுகிறதோ!!!!!)

எழுத கற்றுக் கொள்ளும்

குழந்தையின் கிறுக்கல்கள் என்றுமே

அழகுதானே, தாய்க்கு !!!!!

அதுபோல, உன் எழுத்தைவிடு

நீ வைக்கும் புள்ளிகூட,

கோலமிட்ட்தை போல் என்றும்

கொள்ளை அழகுதான் , எனக்கு!

ஏமாறுவதானால் இவளிடம் தான்

புவி சுழலும்

பகல் அகலும்,என் நிழலும்

என்னை விட்டு நகரும்

நான் தனிமை உணரும் பொழுதில்

உன் நினைவு என் நிழலாய்

என்னை அருகும்,

என் தொண்டை குழி உலரும்.

உன் பெயரை உளரும்,

தனிமையில் இருக்கும்

என்னை உன் நிழல் நெருங்கும

இதழில் புன்னகை பூ பூக்கும்,

இதழ் நெருங்கி பூ பறிக்கத்தான் வருகிறாய்

என்று காத்து என் இதழ் தாங்கி நிற்பேன்.

ஆனால், நீயோ புன்னகைக்கு புன்னகை போதும்

என்று ஏமாற்றி செல்வாய்.

மீண்டும் என் இதழ்கள் புன்னகை பூக்கும்,

ஏமாறுவதில் அப்படி என்ன மகிழ்ச்சி

என கிண்டல் செய்யும் என் இதழ்கள்,

நான் என் இதழ்களிடம் சொல்லடக்க சொன்னேன்,

எங்கே உன் இதழ்களுக்கு கேட்டு விடுமோ?

நீங்கள் இவளுக்காகவே படைக்கப்பட்டவர்கள்,

ஏமாறுவதானால் இவளிடம் தான்

ஏமாற வேண்டும்....என்று

உன்னை நிழலை முத்தமிடுவதாக நினைத்து!


உன்னை முத்தமிட்டபின்பு

என் இதழ்கள் உணவை தொட

மறுக்கின்றன,

அதோடு நில்லாமல் , என் நிழலோ!

உன் நிழல் பட்ட இடம் கண்டால்

அவ்விடம் விட்டு நகரவே மறுக்கிறது,

என்னோடு வரவும் மறுக்கிறது,

உன்னை நிழலை முத்தமிடுவதாக நினைத்து

அங்கேயே தங்கிவிடுகிறது போலும்! 

மொத்தமாக கிள்ளி போகிறாய்!


கிள்ள வேண்டும் போலவே

தோன்றுகிறது என்றாய்,

எனக்கும்தான் உன்னை அள்ள

தோன்றுகிறது!

என்று எனக்கு நானே 

உள்ளத்தில் கூறிக்கொண்டேன்.

ஆனால், நீ அள்ளி முடியும்
கூந்தலிலேயே என் உள்ளம் மட்டுமல்லாமல்,

என்னையும் மொத்தமாக கிள்ளி போகிறாய். 

காதலாய் வடிந்து ஒடும்!!!!!


என் நண்பன் ஒரு குவளை இதை பற்றி ஒரு கவிதை வடி பார்ப்போம் என்றான்

அவனிடம் நான் அளித்த்து இதோ

 

ஒரு குவளை கொடுத்து

கவிதை வடிக்க சொன்னாய்,

குவளை ஒன்றும் என்னவளின்

நினைவுதுளிகள் தங்கி நிற்கும்

உள்ளக்கிளைகளும் அல்ல,

அதன் இலைகளும் அல்ல,

ஒரே ஒரு முறை குவளையின்

ஏதாவது ஒருபுறத்தில் என்னவளின்

பெயரை எழுதிப் பார்,

கவிதை நான் வடிக்க தேவையில்லை,

கவிதை காதலாய் வடிந்து ஒடும்

நீ காட்டிய குவளையின் விளிம்பில்......

நிழல் கண்ணாடியின் கண்டனம்


உன் வீட்டு நிலை கண்ணாடி

எனக்களித்த கண்டன ஓலை,

 

உன்னவளிடம் சொல்லி வை,

தினமும், நிழல் படும்படியாய் நின்று விட்டு

உண்மையை மட்டும் தன்னோடு கொண்டு

சென்று விடுகிறார்ள்!

இது, இனிப்பு காண்பித்து, குழந்தையை

ஏமாற்றுவது போல் உள்ளது,

நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

நான் கூறினேன்,

நீ ஒன்றும் அவளை கடிந்து கொள்ளாதே,

அவள் தன் நிழல் உன்னிடம் விடுத்து,

உண்மை தனதாய் கொண்டு வருவதே,

அந்த உண்மை எனதாய் இருப்பதால்தான்

நான் அவள் நிழலாய் பின் தொடர்வதால்தான்.

என்று கூறி ஏதோ அமைதி படுத்தினேன்

உன் வீட்டு நிலைக் கண்ணாடியை.

கொள்ளை அழகுதான் , எனக்கு!

என் எழுத்து அழகாக இருக்காது,

நீ பார்த்தால் கிண்டலடிப்பாய் என்று

அழகாக சலித்து கொண்டாய்,

(சலித்து கொள்வதிலும் உன் அழகு

எப்படிதான் தெறித்து விழுகிறதோ!!!!!)

எழுத கற்றுக் கொள்ளும்

குழந்தையின் கிறுக்கல்கள் என்றுமே

அழகுதானே, தாய்க்கு !!!!!

அதுபோல, உன் எழுத்தைவிடு

நீ வைக்கும் புள்ளிகூட,

கோலமிட்ட்தை போல் என்றும்

கொள்ளை அழகுதான் , எனக்கு!

ஏமாறுவதானால் இவளிடம் தான்

புவி சுழலும்

பகல் அகலும்,என் நிழலும்

என்னை விட்டு நகரும்

நான் தனிமை உணரும் பொழுதில்

உன் நினைவு என் நிழலாய்

என்னை அருகும்,

என் தொண்டை குழி உலரும்.

உன் பெயரை உளரும்,

தனிமையில் இருக்கும்

என்னை உன் நிழல் நெருங்கும

இதழில் புன்னகை பூ பூக்கும்,

இதழ் நெருங்கி பூ பறிக்கத்தான் வருகிறாய்

என்று காத்து என் இதழ் தாங்கி நிற்பேன்.

ஆனால், நீயோ புன்னகைக்கு புன்னகை போதும்

என்று ஏமாற்றி செல்வாய்.

மீண்டும் என் இதழ்கள் புன்னகை பூக்கும்,

ஏமாறுவதில் அப்படி என்ன மகிழ்ச்சி

என கிண்டல் செய்யும் என் இதழ்கள்,

நான் என் இதழ்களிடம் சொல்லடக்க சொன்னேன்,

எங்கே உன் இதழ்களுக்கு கேட்டு விடுமோ?

நீங்கள் இவளுக்காகவே படைக்கப்பட்டவர்கள்,

ஏமாறுவதானால் இவளிடம் தான்

ஏமாற வேண்டும்....என்று