காற்றே வராத என் வீட்டு சன்னலில்



காற்றே வராத என் வீட்டு சன்னலில்
மழை, மின்னல், தென்றல், கதிரவன்....
என இயற்கையை
இறங்கிவரச் செய்தாய்....
நீ வீசிய ஒற்றைப்பார்வையில்...

சொல்தேடி உன்னிதழ் சேர்க்கிறேன்



இதழ்தேடி தேன் சேர்க்கும்
வண்டைப்போல், சொல்தேடி
உன்னிதழ் சேர்க்கிறேன்...
சொற்களை கவிதையாய் நீ உருமாற்ற....

நான் நடந்து செல்வதா, கடந்து செல்வதா?



நீ கடந்து சென்ற படிகளெல்லாம்....
இன்று நலம் விசாரிக்கின்றன....
அன்று நீ என் தோள் பிடித்து, கை பற்றி
“ஏன் இந்த படிகளுக்கு வலிக்காதா?”
என்று படிகளுக்கு வலிக்காமல்
நடந்ததை நினைவூட்டி...

அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்......?



அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்......?
என் உள்ளத்திலிருக்கும் அன்பிடம்
உன் நினைவுகளை
அடை காக்கும் கதவுகளுக்கான
தாழ்தான் இருக்கிறது...

தேவை வதை



தேவதைகள் என்னும் சொல்லை
வடமொழிச் சொல்லென்று
பல நாட்கள் பயன்படுத்த தயங்கி
நின்றேன்.....

நீ பேசும் மொழியை கேட்ட
பின்தான்........தேவை வதை
என்று...உளறிக் கொண்டே
தேவதை என்ற தமிழ்ச்சொல்லை
கண்டுபிடித்தேன்.....

மீண்டும் விண்ணை தாண்டி........!!!



என் பிரிவுக்கும், தனித்த இரவுக்கும் பொருள்
கொடுத்த காதலை கொடுத்த நீ
என்னோடு இல்லை இன்று தோழி....

நான் கண்ட பொருளை, உனை கண் கொண்டு
கண்டு உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன்..
என்னை தாண்டி என்னுள் வந்த நீ
விண்ணை தாண்டி வருவாயா?

ஊருக்கொரு நிலவு, உன் மாடிக்கொரு நிலவு..



உன் வீட்டு மொட்டைமாடியில்
துணி காய்வதை விட
நிலவுதான் வெகுவாக காய்கிறது....
ஊருக்கொரு நிலவு, உன் மாடிக்கொரு நிலவு..
படைத்திட இயற்கைக்கு முன்மொழிகிறேன்.

ஒளி/ ஒலி மாசு



நீயில்லாத தனிமையில்
உன் குரலை, நிழலை பிரதிபலிக்காத
எல்லா ஒலியும்/ ஒளிகளும்
மாசு எனக்கு

மோதிடவேண்டும் உன் பார்வைகள்



வண்டிகள் மோதிடுமோ?
என்று சாலையை கடக்க தயக்கத்தோடு
காத்திருக்கும் சிறுவன் போல
காத்திருக்கிறேன்......
நீ கடந்து செல்லும் போது
மோதிடவேண்டும் உன் பார்வைகள்
என்னை இன்று என்று....

ஆற்றுக்குள் இறங்காதே



வெள்ளுடை தேவதைகள்
குளிக்கும் நேரத்தில் ஆற்றுக்குள்
இறங்காதே என்று எத்தனை
தடவை சொல்வது.........

பார்! நீ மட்டும் தனியாய்
குளிக்க வேண்டுமென்று
தேவதைகளிடம் கெஞ்சி கேட்டு
கொண்டிருக்கின்றன மீன்கள்

பேசிய முதல் சொல் “மௌனம்”


நீண்ட உரையாடலுக்கு தேவையான
சொற்களை தேடி சேகரித்து
கோர்த்து வைத்திருந்தேன்..
ஆனால், கைப்பேசியில் உன் குரல்
கேட்டவுடன் பேசிய முதல் சொல்
“மௌனம்”

அடுத்த அழைப்பு வரையிலான பொழுதுகளை


பிறகு அழைக்கிறேன்?என்று
நீ அவசர அவசரமாய் அழைப்பை
துண்டிக்கும் பொழுதுகளில்
சிதறி விழும் சொற்களை
கண்டுபிடிப்பதிலேயே அடுத்த
அழைப்பு வரையிலான
பொழுதுகளை காத்து கொள்கிறது...

முள்ளின் காத‌ல் புரியா ரோசா



பிற‌க்கும் முன்பே மார்பில் காத்து
வைக்கும் தாய்ப்பாலைப் போல‌...
ம‌ல‌ரும் முன்பே காத்து நிற்கும்,
முள்ளின் காத‌ல் புரியாம‌ல்...
எப்ப‌டித்தான் எவ‌னோ ஒரு ஆட‌வ‌ன்
த‌ன் காதலுக்கு தூது சொல்ல‌
அழைத்தவுட‌ன் பின்
சென்று விடுகிறதோ??????

உள்ள‌த்திருட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை..



உன் வீட்டு வாச‌லை க‌ட‌ந்த‌ ப‌ல‌நூறு த‌ட‌வைக‌ளில்
ஓரிறு க‌விதைக‌ளைத்தானே திருடியிருக்கிறேன்...
திருட‌ப்ப‌டாத‌து இன்னும் மீத‌மிருக்க‌.....
என் உள்ள‌த்தை நீ திருடிவிட்டு
உன் வீட்டு வாச‌லில்
உள்ள‌த்திருட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை என்று
உன் த‌ந்தை எழுதி வைத்திருப்ப‌தெல்லாம்
கொஞ்ச‌ம் மிகை...

அமாவாசை அத‌னால்தான் வாய்ப்ப‌தில்லை..



மொட்டை மாடிக்கு
க‌திர‌வ‌ன் காய‌வைத்த‌ துணி எடுக்க‌
தின‌மும் போகாதே....
உன் ஊருக்கு ம‌ட்டும் அமாவாசை
அத‌னால்தான் வாய்ப்ப‌தில்லை..

உன் வீட்டு மொட்டை மாடியில்
ம‌‌ட்டும் நில‌வை சிறை வைப்ப‌து
சரியில்லைதானே....
உன் முக‌த்தை காண்பித்தா தின‌மும்
நில‌வுக்கு சோறூட்ட‌ முடியும்....

பொழுதுக‌ளில் வெட்க‌ப்ப‌டுவாயோ?


குறுஞ்செய்தி அனுப்பும் பொழுதுக‌ளில்
வெட்க‌ப்ப‌டுவாயோ?
உன் விர‌ல் த‌ட்டி,
எனை திட்டி அனுப்பிய‌
செய்தியானாலும் வெட்க‌ம் என்
இத‌ழ் தொற்றி ப‌றிக்கிற‌தே...

வித்தை என் உள்ள‌த்தில் விதைத்தாய்


சொல்வித்தை க‌ற்று கொண்டேன்
வில்வித்தை க‌ற்ற‌ உன் புருவ‌ங்க‌ளிட‌மிருந்து
ந‌ல்வித்தை என் உள்ள‌த்தில் விதைத்தாய்...

என்ன‌?

நெல் விதைத்து முத்தை
அறுவ‌டை செய்ய‌ இய‌லாத‌தை போல...
என்னால் நீ த‌ந்த‌ சொல்லை
விதைத்து க‌விதைக‌ளைதான்
அறுவ‌டை செய்ய‌ முடிகிற‌து

இத‌ழ்க‌ளை ஈர‌ப்ப‌டுத்திக் கொள்கிறேன்..

இத‌ழ்க‌ளை ஈர‌ப்ப‌டுத்திக் கொள்கிறேன்..
என்னை நோக்கி நீ வீசும்
காதலால் காய்ந்த‌ சொற்க‌ளை
என் இத‌ழால் ப‌ற்றிக் கொள்ள‌....

காற்றே வராத என் வீட்டு சன்னலில்



காற்றே வராத என் வீட்டு சன்னலில்
மழை, மின்னல், தென்றல், கதிரவன்....
என இயற்கையை
இறங்கிவரச் செய்தாய்....
நீ வீசிய ஒற்றைப்பார்வையில்...

சொல்தேடி உன்னிதழ் சேர்க்கிறேன்



இதழ்தேடி தேன் சேர்க்கும்
வண்டைப்போல், சொல்தேடி
உன்னிதழ் சேர்க்கிறேன்...
சொற்களை கவிதையாய் நீ உருமாற்ற....

நான் நடந்து செல்வதா, கடந்து செல்வதா?



நீ கடந்து சென்ற படிகளெல்லாம்....
இன்று நலம் விசாரிக்கின்றன....
அன்று நீ என் தோள் பிடித்து, கை பற்றி
“ஏன் இந்த படிகளுக்கு வலிக்காதா?”
என்று படிகளுக்கு வலிக்காமல்
நடந்ததை நினைவூட்டி...

அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்......?



அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்......?
என் உள்ளத்திலிருக்கும் அன்பிடம்
உன் நினைவுகளை
அடை காக்கும் கதவுகளுக்கான
தாழ்தான் இருக்கிறது...

தேவை வதை



தேவதைகள் என்னும் சொல்லை
வடமொழிச் சொல்லென்று
பல நாட்கள் பயன்படுத்த தயங்கி
நின்றேன்.....

நீ பேசும் மொழியை கேட்ட
பின்தான்........தேவை வதை
என்று...உளறிக் கொண்டே
தேவதை என்ற தமிழ்ச்சொல்லை
கண்டுபிடித்தேன்.....

மீண்டும் விண்ணை தாண்டி........!!!



என் பிரிவுக்கும், தனித்த இரவுக்கும் பொருள்
கொடுத்த காதலை கொடுத்த நீ
என்னோடு இல்லை இன்று தோழி....

நான் கண்ட பொருளை, உனை கண் கொண்டு
கண்டு உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன்..
என்னை தாண்டி என்னுள் வந்த நீ
விண்ணை தாண்டி வருவாயா?

ஊருக்கொரு நிலவு, உன் மாடிக்கொரு நிலவு..



உன் வீட்டு மொட்டைமாடியில்
துணி காய்வதை விட
நிலவுதான் வெகுவாக காய்கிறது....
ஊருக்கொரு நிலவு, உன் மாடிக்கொரு நிலவு..
படைத்திட இயற்கைக்கு முன்மொழிகிறேன்.

ஒளி/ ஒலி மாசு



நீயில்லாத தனிமையில்
உன் குரலை, நிழலை பிரதிபலிக்காத
எல்லா ஒலியும்/ ஒளிகளும்
மாசு எனக்கு

மோதிடவேண்டும் உன் பார்வைகள்



வண்டிகள் மோதிடுமோ?
என்று சாலையை கடக்க தயக்கத்தோடு
காத்திருக்கும் சிறுவன் போல
காத்திருக்கிறேன்......
நீ கடந்து செல்லும் போது
மோதிடவேண்டும் உன் பார்வைகள்
என்னை இன்று என்று....

ஆற்றுக்குள் இறங்காதே



வெள்ளுடை தேவதைகள்
குளிக்கும் நேரத்தில் ஆற்றுக்குள்
இறங்காதே என்று எத்தனை
தடவை சொல்வது.........

பார்! நீ மட்டும் தனியாய்
குளிக்க வேண்டுமென்று
தேவதைகளிடம் கெஞ்சி கேட்டு
கொண்டிருக்கின்றன மீன்கள்

பேசிய முதல் சொல் “மௌனம்”


நீண்ட உரையாடலுக்கு தேவையான
சொற்களை தேடி சேகரித்து
கோர்த்து வைத்திருந்தேன்..
ஆனால், கைப்பேசியில் உன் குரல்
கேட்டவுடன் பேசிய முதல் சொல்
“மௌனம்”

அடுத்த அழைப்பு வரையிலான பொழுதுகளை


பிறகு அழைக்கிறேன்?என்று
நீ அவசர அவசரமாய் அழைப்பை
துண்டிக்கும் பொழுதுகளில்
சிதறி விழும் சொற்களை
கண்டுபிடிப்பதிலேயே அடுத்த
அழைப்பு வரையிலான
பொழுதுகளை காத்து கொள்கிறது...

முள்ளின் காத‌ல் புரியா ரோசா



பிற‌க்கும் முன்பே மார்பில் காத்து
வைக்கும் தாய்ப்பாலைப் போல‌...
ம‌ல‌ரும் முன்பே காத்து நிற்கும்,
முள்ளின் காத‌ல் புரியாம‌ல்...
எப்ப‌டித்தான் எவ‌னோ ஒரு ஆட‌வ‌ன்
த‌ன் காதலுக்கு தூது சொல்ல‌
அழைத்தவுட‌ன் பின்
சென்று விடுகிறதோ??????

உள்ள‌த்திருட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை..



உன் வீட்டு வாச‌லை க‌ட‌ந்த‌ ப‌ல‌நூறு த‌ட‌வைக‌ளில்
ஓரிறு க‌விதைக‌ளைத்தானே திருடியிருக்கிறேன்...
திருட‌ப்ப‌டாத‌து இன்னும் மீத‌மிருக்க‌.....
என் உள்ள‌த்தை நீ திருடிவிட்டு
உன் வீட்டு வாச‌லில்
உள்ள‌த்திருட‌ர்க‌ள் எச்ச‌ரிக்கை என்று
உன் த‌ந்தை எழுதி வைத்திருப்ப‌தெல்லாம்
கொஞ்ச‌ம் மிகை...

அமாவாசை அத‌னால்தான் வாய்ப்ப‌தில்லை..



மொட்டை மாடிக்கு
க‌திர‌வ‌ன் காய‌வைத்த‌ துணி எடுக்க‌
தின‌மும் போகாதே....
உன் ஊருக்கு ம‌ட்டும் அமாவாசை
அத‌னால்தான் வாய்ப்ப‌தில்லை..

உன் வீட்டு மொட்டை மாடியில்
ம‌‌ட்டும் நில‌வை சிறை வைப்ப‌து
சரியில்லைதானே....
உன் முக‌த்தை காண்பித்தா தின‌மும்
நில‌வுக்கு சோறூட்ட‌ முடியும்....

பொழுதுக‌ளில் வெட்க‌ப்ப‌டுவாயோ?


குறுஞ்செய்தி அனுப்பும் பொழுதுக‌ளில்
வெட்க‌ப்ப‌டுவாயோ?
உன் விர‌ல் த‌ட்டி,
எனை திட்டி அனுப்பிய‌
செய்தியானாலும் வெட்க‌ம் என்
இத‌ழ் தொற்றி ப‌றிக்கிற‌தே...

வித்தை என் உள்ள‌த்தில் விதைத்தாய்


சொல்வித்தை க‌ற்று கொண்டேன்
வில்வித்தை க‌ற்ற‌ உன் புருவ‌ங்க‌ளிட‌மிருந்து
ந‌ல்வித்தை என் உள்ள‌த்தில் விதைத்தாய்...

என்ன‌?

நெல் விதைத்து முத்தை
அறுவ‌டை செய்ய‌ இய‌லாத‌தை போல...
என்னால் நீ த‌ந்த‌ சொல்லை
விதைத்து க‌விதைக‌ளைதான்
அறுவ‌டை செய்ய‌ முடிகிற‌து

இத‌ழ்க‌ளை ஈர‌ப்ப‌டுத்திக் கொள்கிறேன்..

இத‌ழ்க‌ளை ஈர‌ப்ப‌டுத்திக் கொள்கிறேன்..
என்னை நோக்கி நீ வீசும்
காதலால் காய்ந்த‌ சொற்க‌ளை
என் இத‌ழால் ப‌ற்றிக் கொள்ள‌....