சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?



நம் இடைவெளியை காற்று நிரப்புகிறது,
என்பதை அறிந்து கொண்டதிலிருந்து...
சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?
என்ற சிந்தனையில் இருக்கிறேன்....

கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?



அன்று நீ கழற்றி வைத்து
விளையாடிக் கொண்டிருந்த
கொலுசுகளோடு..என்னையும் கேட்காமல்..
நீயும் அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த
மனது, தினமும் என்னிடம் வந்து...
கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?

முத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்


என் சொற்களையெல்லாம் நீ திருடிக் கொள்கிறாய்...
நான் எதைத்தான் பேசுவது என்று கோபித்துக் கொள்கிறாய்.
சொற்களை என் இதழ் பேசிக் கொள்ளட்டும்.
முத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்

5 லிட்டர் Wine



என் வீட்டில் தினமும் 5 லிட்டர்தான் wine தயாரிக்க முடியும்..
பிறகென்ன வெறும் 5 லிட்டரில் நீ குளித்து முடித்தால்

உன் தலையணையும், உன் நினைவுகளும்



நீ தனித்து விட்டுச் செல்லும் தருணங்களில்,
உனக்கு முன்பாக வந்து அணைத்துக் கொள்கின்றன..
உன் தலையணையும், உன் நினைவுகளும்

எச்சில் விழுங்கி.....



உன் மீதான ஆசை,ஏக்கம், அச்சம், விருப்பு
போன்றவற்றால் எச்சில் விழுங்கி
கொண்டே இருக்கும் தொண்டை..
உணவுண்ணும் பொழுதும் வேகமாக
சோற்றையும் விழுங்கி விடுகிறது..

அது தெரியாமல் விரைவாக
ஏனடா உண்கிறாய்..என்று கண்டிக்கிறாய்..

சொட்டு சொட்டாய் நனையும் என் உள்ளம்



துவட்டாத தலைமுடியில் துண்டை துணைக்கு
அழைத்து வந்து நீ நிற்கும் பொழுது...
சொட்டு சொட்டாய் நனைந்து போகிறது
என் உள்ளம்

இதழில் கவிதை எழுதினால்..என்ன பொருள்?



கையில் எழுதுகோலை வைத்துக் கொண்டு..
இதழில் கவிதை எழுதினால்..என்ன பொருள்

எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்




விரல் வருடி கவிதை
எழுதச் சொல்கிறாய்..

பெருமூச்சுதான் வருகிறது
எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்

என் இதழ்களோடு பேசுவதில்லை



என் இதழ்கள்..
என் இதழ்களோடு பேசுவதில்லை...
இதழ் புண்ணை காரணம் காட்டி பேச மறுக்கிறது..
ஆனால், கண்டிப்பாக காரணம் அதுவல்ல
என்று எனக்கு தெரியும்...

என் சொந்த கடல் நான் தருகிறேன்..



கடலுக்குள் இறங்குவதை தடை செய்தாய்...
ஏனென்று புரியவில்லை...

அந்த கடல் வேண்டாம்..
என் சொந்த கடல் நான் தருகிறேன்..என்றாய்..

சொந்தமாய் கடலா? என்று வியந்து போனேன்..

பின்னர்தான் புரிந்தது
கடலுக்குள் சென்றால்..
அலை முத்தமிட்டுவிடும்..
என்பதற்காக நீயே ஒரு
செயற்கை கடல் அமைத்தது...

நான் உறங்க வேண்டாமா?

உன் மார் சாய்ந்து உறங்க வேண்டுமென்றாய்...
நான் உறங்க வேண்டாமா?

பொய்யை கூறவில்லையாடி என் கள்ளி

உன்னை தீண்ட வரும் வண்ணத்துப்பூச்சிக்கு,
உன் நிறமிகளை நான் திருடி விட்டதாக
அன்று நீ முகம் சிவந்து கூறிய பொய்யை

கூறவில்லையாடி
என் கள்ளி

இதழுக்கு வரம் கிடைத்திருக்கும்

முத்தம் தா என்று இதழ்கள் கேட்க,
கன்னத்திற்கு வரம் கிடைத்தது..

கன்னமே கேட்டிருக்கலாம்,
இதழுக்கு வரம் கிடைத்திருக்கும்

நீ பறிக்கும் முன்னே உன் கை அவை வருமென்று

ரோசா பறித்து காண்பிக்கிறேன்

என்று சவால் விட்டுச் சென்றாய்..

அந்த நிறம், இந்த நிறம், எந்த நிறத்திலும்

ரோஜா பறிக்க முடியவில்லை பார்த்தாயா?

அப்பொழுதே சொன்னேனே நீ பறிக்கும்

முன்னே உன் கை அவை வருமென்று

மோதிட உள்ளம் துடிக்கிறது...

வண்டிகள் மோதிடுமோ?

என்று சாலையை கடக்க தயக்கத்தோடு

காத்திருக்கும் சிறுவன் போல

காத்திருக்கிறேன்......

தேவதை நீ கடந்து செல்லும் போது

மோதிட உள்ளம் துடிக்கிறது...

எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்

விரல் வருடி கவிதைஎழுதச் சொல்கிறாய்..

பெருமூச்சுதான் வருகிறது

எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்

கைப்பேசி முத்தங்கள்


நேருக்கு மாறாக,
உன் இதழ்கள் நோகாமல்

கைப்பேசிக்கு முத்தங்களை

தாராளமாக அனுப்புகிறாய்
திறந்தால், இதழ்களுக்கு பதிலாக,

கண்களில் ஒட்டிக் கொள்கிறது.

நிலவில் ஏறிக் கொண்டிருக்கிறேன்.


நிலவில் ஏறிக் கொண்டிருக்கிறேன்.

நீ கண்டு கொண்டிருக்கும்

நிலவிலிருந்து உன்னை காண......

.

சொற்களின் சண்டை


நான் நினைத்த பொழுதில் பேச முடியா சொற்கள்,
நீ நினைத்த கணத்தில் பேசும் சொற்களோடு
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன..
காதல் வேடிக்கை பார்க்கிறது.

.

சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?



நம் இடைவெளியை காற்று நிரப்புகிறது,
என்பதை அறிந்து கொண்டதிலிருந்து...
சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?
என்ற சிந்தனையில் இருக்கிறேன்....

கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?



அன்று நீ கழற்றி வைத்து
விளையாடிக் கொண்டிருந்த
கொலுசுகளோடு..என்னையும் கேட்காமல்..
நீயும் அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த
மனது, தினமும் என்னிடம் வந்து...
கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?

முத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்


என் சொற்களையெல்லாம் நீ திருடிக் கொள்கிறாய்...
நான் எதைத்தான் பேசுவது என்று கோபித்துக் கொள்கிறாய்.
சொற்களை என் இதழ் பேசிக் கொள்ளட்டும்.
முத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்

5 லிட்டர் Wine



என் வீட்டில் தினமும் 5 லிட்டர்தான் wine தயாரிக்க முடியும்..
பிறகென்ன வெறும் 5 லிட்டரில் நீ குளித்து முடித்தால்

உன் தலையணையும், உன் நினைவுகளும்



நீ தனித்து விட்டுச் செல்லும் தருணங்களில்,
உனக்கு முன்பாக வந்து அணைத்துக் கொள்கின்றன..
உன் தலையணையும், உன் நினைவுகளும்

எச்சில் விழுங்கி.....



உன் மீதான ஆசை,ஏக்கம், அச்சம், விருப்பு
போன்றவற்றால் எச்சில் விழுங்கி
கொண்டே இருக்கும் தொண்டை..
உணவுண்ணும் பொழுதும் வேகமாக
சோற்றையும் விழுங்கி விடுகிறது..

அது தெரியாமல் விரைவாக
ஏனடா உண்கிறாய்..என்று கண்டிக்கிறாய்..

சொட்டு சொட்டாய் நனையும் என் உள்ளம்



துவட்டாத தலைமுடியில் துண்டை துணைக்கு
அழைத்து வந்து நீ நிற்கும் பொழுது...
சொட்டு சொட்டாய் நனைந்து போகிறது
என் உள்ளம்

இதழில் கவிதை எழுதினால்..என்ன பொருள்?



கையில் எழுதுகோலை வைத்துக் கொண்டு..
இதழில் கவிதை எழுதினால்..என்ன பொருள்

எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்




விரல் வருடி கவிதை
எழுதச் சொல்கிறாய்..

பெருமூச்சுதான் வருகிறது
எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்

என் இதழ்களோடு பேசுவதில்லை



என் இதழ்கள்..
என் இதழ்களோடு பேசுவதில்லை...
இதழ் புண்ணை காரணம் காட்டி பேச மறுக்கிறது..
ஆனால், கண்டிப்பாக காரணம் அதுவல்ல
என்று எனக்கு தெரியும்...

என் சொந்த கடல் நான் தருகிறேன்..



கடலுக்குள் இறங்குவதை தடை செய்தாய்...
ஏனென்று புரியவில்லை...

அந்த கடல் வேண்டாம்..
என் சொந்த கடல் நான் தருகிறேன்..என்றாய்..

சொந்தமாய் கடலா? என்று வியந்து போனேன்..

பின்னர்தான் புரிந்தது
கடலுக்குள் சென்றால்..
அலை முத்தமிட்டுவிடும்..
என்பதற்காக நீயே ஒரு
செயற்கை கடல் அமைத்தது...

நான் உறங்க வேண்டாமா?

உன் மார் சாய்ந்து உறங்க வேண்டுமென்றாய்...
நான் உறங்க வேண்டாமா?

பொய்யை கூறவில்லையாடி என் கள்ளி

உன்னை தீண்ட வரும் வண்ணத்துப்பூச்சிக்கு,
உன் நிறமிகளை நான் திருடி விட்டதாக
அன்று நீ முகம் சிவந்து கூறிய பொய்யை

கூறவில்லையாடி
என் கள்ளி

இதழுக்கு வரம் கிடைத்திருக்கும்

முத்தம் தா என்று இதழ்கள் கேட்க,
கன்னத்திற்கு வரம் கிடைத்தது..

கன்னமே கேட்டிருக்கலாம்,
இதழுக்கு வரம் கிடைத்திருக்கும்

நீ பறிக்கும் முன்னே உன் கை அவை வருமென்று

ரோசா பறித்து காண்பிக்கிறேன்

என்று சவால் விட்டுச் சென்றாய்..

அந்த நிறம், இந்த நிறம், எந்த நிறத்திலும்

ரோஜா பறிக்க முடியவில்லை பார்த்தாயா?

அப்பொழுதே சொன்னேனே நீ பறிக்கும்

முன்னே உன் கை அவை வருமென்று

மோதிட உள்ளம் துடிக்கிறது...

வண்டிகள் மோதிடுமோ?

என்று சாலையை கடக்க தயக்கத்தோடு

காத்திருக்கும் சிறுவன் போல

காத்திருக்கிறேன்......

தேவதை நீ கடந்து செல்லும் போது

மோதிட உள்ளம் துடிக்கிறது...

எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்

விரல் வருடி கவிதைஎழுதச் சொல்கிறாய்..

பெருமூச்சுதான் வருகிறது

எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்

கைப்பேசி முத்தங்கள்


நேருக்கு மாறாக,
உன் இதழ்கள் நோகாமல்

கைப்பேசிக்கு முத்தங்களை

தாராளமாக அனுப்புகிறாய்
திறந்தால், இதழ்களுக்கு பதிலாக,

கண்களில் ஒட்டிக் கொள்கிறது.

நிலவில் ஏறிக் கொண்டிருக்கிறேன்.


நிலவில் ஏறிக் கொண்டிருக்கிறேன்.

நீ கண்டு கொண்டிருக்கும்

நிலவிலிருந்து உன்னை காண......

.

சொற்களின் சண்டை


நான் நினைத்த பொழுதில் பேச முடியா சொற்கள்,
நீ நினைத்த கணத்தில் பேசும் சொற்களோடு
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன..
காதல் வேடிக்கை பார்க்கிறது.

.