
உன் கண்களில் காத்திருக்கும்
கண்ணீர், என் அணைப்பிற்கு
காத்திருக்கும் என்பதனை
நான் நன்கறிவேன்..
உன்னிடம் சண்டை போட்டு
விலகியிருக்கும் என்னை
உன்னிடம் அழைக்கும் திறவுகோல்,
உன் கண்ணீர் என்று தெரிந்தேதான்
சுரக்கிறது உன் கண்ணில்




எனக்காக காத்திருந்த பொழுதுகளில்
உன் கைவிரல்களின் கோபம் மண்ணில்
வரைந்த பூக்கோலம்....மெய்யாலுமே
கோபத்திலும் கூட மலர்கள் மலரும்என்பதை உணர்ந்து கொண்டேன்


கல்வி அறைக்கு நீ பை தூக்கி
போவதுதான் அனைவர் கண்ணுக்கும்
தெரியும், ஆனால்,என் உள்ளத்தின்
ஒரு பகுதியை கிள்ளி எடுத்து போனதுஎனக்கு மட்டும்தான் தெரியும்.


பசுமையான வயல்வெளியில்
பச்சை சேலை போர்த்தியிருப்பதாய்
கவிஞர்கள் கவி பாட, நீயோ
நீல நிற சேலை உடுத்தி வந்தாய்
தங்கள் பசுமை நிறத்திற்கு புற்கள் வருத்தப்பட்டன,நீலவானம் பெருமை கொண்டது...

புவி தன் புவியீர்ப்பு விசை கொண்ட
காரணத்தை இன்றுதான் உணர்ந்தாம்,
நீ சாய்ந்துறங்க உன்னை தாங்கிக் கொள்ளும்வாய்ப்பு கிடைத்ததால்.
பூக்களின் நடுவே அமர்ந்திருப்பதாய்