
நம் இடைவெளியை காற்று நிரப்புகிறது,
என்பதை அறிந்து கொண்டதிலிருந்து...
சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?
என்ற சிந்தனையில் இருக்கிறேன்....










உன்னை தீண்ட வரும் வண்ணத்துப்பூச்சிக்கு,
உன் நிறமிகளை நான் திருடி விட்டதாக
அன்று நீ முகம் சிவந்து கூறிய பொய்யை
கூறவில்லையாடி
என் கள்ளி

முத்தம் தா என்று இதழ்கள் கேட்க,
கன்னத்திற்கு வரம் கிடைத்தது..
கன்னமே கேட்டிருக்கலாம்,
இதழுக்கு வரம் கிடைத்திருக்கும்

ரோசா பறித்து காண்பிக்கிறேன்
என்று சவால் விட்டுச் சென்றாய்..
அந்த நிறம், இந்த நிறம், எந்த நிறத்திலும்
ரோஜா பறிக்க முடியவில்லை பார்த்தாயா?
அப்பொழுதே சொன்னேனே நீ பறிக்கும்
முன்னே உன் கை அவை வருமென்று

வண்டிகள் மோதிடுமோ?
என்று சாலையை கடக்க தயக்கத்தோடு
காத்திருக்கும் சிறுவன் போல
காத்திருக்கிறேன்......
தேவதை நீ கடந்து செல்லும் போது
மோதிட உள்ளம் துடிக்கிறது...

விரல் வருடி கவிதைஎழுதச் சொல்கிறாய்..
பெருமூச்சுதான் வருகிறது
எந்த சொல்லில் அந்த பெருமூச்சை இறக்குவேன்

நேருக்கு மாறாக,
உன் இதழ்கள் நோகாமல்
கைப்பேசிக்கு முத்தங்களை
தாராளமாக அனுப்புகிறாய்
திறந்தால், இதழ்களுக்கு பதிலாக,
கண்களில் ஒட்டிக் கொள்கிறது.



தனிமையில் சொற்களின்
நான் கவிதை எழுதும் தாள்களில்
அடிக்கடி விழும் உன் கை குட்டைகளை
கவனியாமல் விட்டதில் நேற்று இரண்டு கவிதைகளை
காணவில்லை.....
உன் கைகுட்டைக்கு அப்படி என்ன கள்ளத்தனம்?